அணுகுண்டு வைக்கல
ஆயுதம் ஏந்தல
ஆள் கடத்தலும் செய்யல
உணவுக் கலப்படம் செய்யல
ஊர் சொத்த கொல்லையடிக்கல
ஊழல் செஞ்சும் பிழைக்கல
மது விக்கல மாதுவும் விக்கல
மதக் கலவரமும் செய்யல
பேருந்தைக் கொளுத்தல
மரத்தை வெட்டல
எவனோ உள்ளப் போனதுக்கு
எவன் உயிரையும் நாங்க எடுக்கல
அடிமையா வாழல எவரையும்
அடிமையாக்கவும் முயற்சிக்கல
செய்ததெல்லாம் ஒன்று..
உயிர் வாழ பிழைப்பைத் தேடி
கடலுக்குள் சென்றோம்..
எல்லைத் தாண்டினோம் என
எளிதில் பறிக்கப்பட்டது எங்கள்
உயிர்..
உலகிலேயே இவ்வளவு துச்சமாக அற்பக் காரணம் சொல்லிக் கொல்லப்படும் உயிர் தமிழக மீனவனுடையது மட்டுமே. எல்லை தாண்டினார்கள் சுட்டோம் என்றுச் சொல்லுவதை விட, இலங்கை அரசுக்கு பொழுது போகவில்லை, கடலுக்கு வேட்டைக்கு வந்தோம் என்றுச் சொல்லுங்கள். பொருத்தமாக இருக்கும்.
அந்த கால அரசர்கள் மிருகத்தை வேட்டையாட காடுகளுக்கு செல்வார்கள் ஆனால் இந்த சிங்கள மிருங்கள் மனிதர்களை வேட்டையாட இந்திய கடலுக்குள் வருகின்றனர்
ReplyDelete