1) வெள்ளையா இருக்கவனுக்கு ஆங்கிலம் சரளமா பேசத் தெரியும்.
2) ஆங்கிலம் சரளமா பேசத் தெரிஞ்சவனுக்கு உலகமேத் தெரியும்.
3) நிறம் கம்மியா இருக்கவனுக்கு ஆங்கிலம் பேசத் தெரியாது.
4) தமிழ் பேசுறவனுக்கு தமிழைத் தவிர ஒன்றும் தெரியாது.
5) முதல் பெஞ்சில் உட்கார்ந்திருப்பவன் புத்திசாலி.
6) கடைசி பெஞ்சில் உட்கார்ந்திருப்பவன் மக்கு.
7) வேட்டிக் கட்டுனவங்க படிக்காதவங்க.
8) கையெழுத்து அழகா இருந்தா எழுதினது பாட்டி வடை சுட்ட கதையா இருந்தாலும் 100 மதிப்பெண்.
9) பொறியியலும் மருத்துவமும் படிப்பவன் மேதை.
10) ஒரு சினிமா வ ஒருதரம் ரசித்துவிட்டால் தொடர்ந்து
அதேபானியில் படம் எடுப்பது.
அதேபானியில் படம் எடுப்பது.
11) பெத்தவன் பிறந்த நாள் தெரியாதவன் தலைவன் போஸ்டருக்கு பாலூத்தறது.
12) மழை பெய்து தேங்கிய நீரில் நீந்திக் கொண்டே பேருந்து செல்வது .
13) ஒரே தண்டவாளத்தில் எதிர் எதிரே ஒரே நேரத்தில் இரயில் வந்து மோதுவது.
14) கீழே விழும் புத்தகத்தை பெண்ணிடம் எடுத்துக் கொடுத்ததும் காதல் வருவது.
15) அரசியல்வாதி ஆவதற்கு அதிகப்பட்ச தகுதி TV Channel ஆரம்பிப்பது.
16) பேருந்தில் தொங்கிக் கொண்டு பயணம் செய்வது வீரம் சாகசம்னு நினைப்பது.
17) நகைக் கடைகளுக்கு நடிகைகளை வச்சு மட்டுமே திறப்புவிழா நடத்துவது.
18) இடுப்பு வலி வராத புள்ளத்தாச்சுக்கும் பணத்திற்காக சிசேரியன் செய்வது.
19) பரிட்சை எழுதாதவனுக்கு " பாஸ்" என்று தேர்வு முடிவு வருவது.
20) இலவசங்களுக்காகவும் பணத்திற்காகவும் தன் உரிமை அறியாமல் ஓட்டை விற்பது.
21) Ambulance உம் , காவல் துறையும் அழைத்ததும் வருமோ இல்லையோ pizza வந்திடும்.
22) இலவசமா கிடைக்கற அரிசி புழுவோட இருக்கும்.இலவசமா கிடைக்கற sim card credit (balance) oh da இருக்கும்.
23) கல்விக் கடனுக்கான வட்டி விகிதம் வாகனக் கடனின் வட்டி விகிதத்தை விட அதிகம்.
இன்னும் நமக்கே நமக்குன்னு நிறைய இருக்கு.நான் இதோடு நிறுத்திக் கொள்கிறேன்.
-ஆதிரா.
நல்ல வயித்தெரிச்சல்கள்.
ReplyDeleteஎனக்கு மட்டுமில்லை ஐயா.எல்லாருக்கும் இருக்குது இந்த வயித்தெரிச்சல்..அதை நான் எழுதிவிட்டேன்.அவ்வளவு தான்.வருகைக்கு நன்றி
Deleteசில வரிகள் பதினெட்டாம் நூற்றாண்டில் இருந்து எழுதி இருக்குறீர்கள்...
ReplyDeleteசரி... என்ன செய்யலாம் சொல்லுங்க...
என்னை என்னச் செய்யலாம் என்று கேட்டால்,முடிந்த வரையில்.. உரக்க கத்த வேண்டும், டர்பன் வைத்து காதை அடைத்திருக்கும் நமது மாண்புமிகு பிரதமர் காதில் விழும் வரையில்..வருகைக்கு நன்றி.
Delete
ReplyDeleteநல்ல வேளை இதை நான் எழுதவில்லை. நான் மட்டும் எழுதி பதிவிட்டு இருந்தா என்னை தேச துரோகியாக வூடு கட்டி அடிப்பாரகள்,
ஏன் அப்படி மதுரைத் தமிழரே...????தங்களை வஞ்சுபவர் என்னை மட்டும் விட்ட வைக்கவாப் போகிறார்கள்.என்னைப் பொருத்தவரையில்,தாய் நாட்டின் மீது உண்மையில் அக்கறை இருப்பவன் எனில் நாட்டின் குறைகளை நம்மவரிடம் பேச வேண்டும்.நிறைகளை அயலானிடம் பேச வேண்டும்.
Deleteஅதைத் தான் நான் செய்கிறேன்..
ஆ.... ஏனித்தனை கடுப்பூஊஊ...:)
ReplyDeleteகண்ணில தெரியுது சிவப்பூஊஊ....:)
ம்ம்ம்...என்ன செய்வது இளமதி..என் வலைத்தளம் எனக்கு,கோபம் என்றாலும் மகிழ்ச்சி என்றாலும் கொட்டித் தீர்க்கும் தாய் மடி ஆகி விட்டது ....
Deleteவருகைக்கு நன்றி.
நம் நாட்டையும் சேர்த்துக்கொள்ளுங்கள். :)) படம் சூப்பர்.:)
ReplyDeleteஇந்தியாவில் மட்டுமேச் சாத்தியம்..//!!!
ReplyDeleteகுறைகளை பட்டியளிட்டாச்சி, அதே நேரம் ஒன்று, இரண்டு நிறைகளையும் சொல்லியிருக்கலாம்...! நிறைகள் ஒன்றுமே இல்லையா...?
ReplyDeleteநிறைகள் நிறையவே இருக்கிறது..நாம் அதிகம் நேசிக்கும் ஒருவரின் நிறைகள் மட்டுமே எப்போதும் நம் கண்ணுக்குத் தெரியும்.சுட்டிக் காட்டத் தேவையில்லை.குறைகளை மறந்துவிடுவோம் நாம் அதிகம் நேசிப்பதால்..
Deleteஒருவர் என்று குறிப்பிட்டது நம் இந்தியாவை..நிறைகளுக்கான பதிவுடன் வருகிறேன் விரைவில்..
வருகைக்கு நன்றி..
நல்ல விஷயங்கள் எவ்வளோவோ உண்டு .அதையும் சொல்லலாமே
ReplyDelete