என் கதிரவனின் காலை வணக்கத்தை
குறுஞ்செய்தியில் கொண்டுவந்து என்
காதில் ஒலித்து என்னை கண்விழிக்க
வைத்திடுவாய் நீ..
என் ஏகாந்த இரவுகளில் இளையராஜாவின்
இசை ராஜாங்கத்துடன் எனக்கு துணை
இருந்திடுவாய் நீ..
என்னவனின் குரல் கேட்க
உன்னையே நோக்கி தவமிருக்க
சிணுங்கல் கொண்டு என்னை சிரிக்க
வைத்திடுவாய் நீ..
சத்தமில்லாத முத்தத்திலும்
சத்தம் சேர்த்து எனக்கென
சிறப்புப் பரிசாய் தந்திடுவாய் நீ..
என் சந்தோஷங்கள் முதல் சங்கடங்கள் வரை
சகலமும் தாங்கி நின்றிடுவாய் நீ...
காத்திருப்பதெல்லாம் சுகமென எனக்கு
கற்றுத் தந்தாய் நீ ...
என் காதலின் ஆணி வேராய் இருந்து
ஆரம்பித்த நாள் முதல் அச்சுமுறியாமல்
என்னை அரவணைத்தாய் நீ..
அதனாலோ என்னவோ அதிகமாய் நேசித்தேன்
உயிரெனப் பாவித்து உள்ளங்கையில் அடக்கி
ஒரு கனமும் உன்னை பிரியாமல் இருந்தேன்..
உன்னை என்னிடமிருந்து பிரிக்கத்தான்
வந்ததோ வம்பு அன்று..
வாயடித்துப் பேசுகிறேன் என வஞ்சிட்டான்
வந்ததொரு கோவம் அவன் வாய்மொழியால்..
சினம் கொண்டு செய்வதறியாது நின்றேன்..
என் வார்த்தைகளைச் சுமந்து எனக்கென
சிறம் தாழ்த்தி பல முறை நின்ற உன்னிடமே
என் சினத்தை உமிழ்ந்தேன்..
அடித்து நொறுக்கினேன் அங்கம் உதிர்ந்து
அங்கொன்றும் இங்கொன்றுமாய் ஆனாய்..
அகந்தை அடங்கியதும் அகம் சொல்லிட்டது
அவள் உன்னுடன் இல்லை என்று..
சிதறிய உன்னை சேர்த்தெடுத்து அணைத்தேன்
சிரிப்பொலி இல்லாத உன் அமைதி சொன்னது நீ
செத்துவிட்டச் செய்தியை..
அவனுடனான ஊடல் அடுத்த நாளே முடிவுற்றது.
அங்காடி பல அலைந்து திரிந்தும் உன்னை மட்டும்
என்னால் பழையதாய் மீட்கமுடியவில்லை.
பழுது பார்த்தும் பயனில்லை
புதியதை ஏற்கவும் மனமில்லை.
புரிந்தது ஒன்று மட்டும், அர்த்தமற்ற
ஆத்திரம் அழிவைத் தானே தரும்.
அழித்திட்டேன் உன்னை இனி
அழுதென்ன இலாபம்..
குறுஞ்செய்தியில் கொண்டுவந்து என்
காதில் ஒலித்து என்னை கண்விழிக்க
வைத்திடுவாய் நீ..
என் ஏகாந்த இரவுகளில் இளையராஜாவின்
இசை ராஜாங்கத்துடன் எனக்கு துணை
இருந்திடுவாய் நீ..
என்னவனின் குரல் கேட்க
உன்னையே நோக்கி தவமிருக்க
சிணுங்கல் கொண்டு என்னை சிரிக்க
வைத்திடுவாய் நீ..
சத்தமில்லாத முத்தத்திலும்
சத்தம் சேர்த்து எனக்கென
சிறப்புப் பரிசாய் தந்திடுவாய் நீ..
என் சந்தோஷங்கள் முதல் சங்கடங்கள் வரை
சகலமும் தாங்கி நின்றிடுவாய் நீ...
காத்திருப்பதெல்லாம் சுகமென எனக்கு
கற்றுத் தந்தாய் நீ ...
என் காதலின் ஆணி வேராய் இருந்து
ஆரம்பித்த நாள் முதல் அச்சுமுறியாமல்
என்னை அரவணைத்தாய் நீ..
அதனாலோ என்னவோ அதிகமாய் நேசித்தேன்
உயிரெனப் பாவித்து உள்ளங்கையில் அடக்கி
ஒரு கனமும் உன்னை பிரியாமல் இருந்தேன்..
உன்னை என்னிடமிருந்து பிரிக்கத்தான்
வந்ததோ வம்பு அன்று..
வாயடித்துப் பேசுகிறேன் என வஞ்சிட்டான்
வந்ததொரு கோவம் அவன் வாய்மொழியால்..
சினம் கொண்டு செய்வதறியாது நின்றேன்..
என் வார்த்தைகளைச் சுமந்து எனக்கென
சிறம் தாழ்த்தி பல முறை நின்ற உன்னிடமே
என் சினத்தை உமிழ்ந்தேன்..
அடித்து நொறுக்கினேன் அங்கம் உதிர்ந்து
அங்கொன்றும் இங்கொன்றுமாய் ஆனாய்..
அகந்தை அடங்கியதும் அகம் சொல்லிட்டது
அவள் உன்னுடன் இல்லை என்று..
சிதறிய உன்னை சேர்த்தெடுத்து அணைத்தேன்
சிரிப்பொலி இல்லாத உன் அமைதி சொன்னது நீ
செத்துவிட்டச் செய்தியை..
அவனுடனான ஊடல் அடுத்த நாளே முடிவுற்றது.
அங்காடி பல அலைந்து திரிந்தும் உன்னை மட்டும்
என்னால் பழையதாய் மீட்கமுடியவில்லை.
பழுது பார்த்தும் பயனில்லை
புதியதை ஏற்கவும் மனமில்லை.
புரிந்தது ஒன்று மட்டும், அர்த்தமற்ற
ஆத்திரம் அழிவைத் தானே தரும்.
அழித்திட்டேன் உன்னை இனி
அழுதென்ன இலாபம்..
அடடா... இப்படியா கோபம் வருவது...?
ReplyDelete/// அர்த்தமற்ற ஆத்திரம் அழிவைத் தானே தரும்... ///
வாழ்த்துக்கள்...
வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி
Deleteஅருமை அருமை
ReplyDeleteமிகவும் ரசித்தேன்
தொடர வாழ்த்துக்கள்
வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி ஐயா
Deleteஅன்புத்தோழி ஆதிரா....
ReplyDeleteஅழகிய சிரிக்கச் சிந்திக்கவென சிதறிய கவிதை.
வாழ்த்துக்கள்!
ஆத்திரத்தில் ஊடலான காதலும் கூடலாகும் ஆகாதே
அழிந்துவிட்ட கைப்பேசி...:)
நன்றி தோழி..
Deleteஆஹா ஆஹா அருமைக்கவிதை ஆத்திரத்தில் கைபேசி பாவம் தான் நம் உலகமே இந்த கைபேசிதான் அதனால் நானும் பட்டேன் வலி கண்ணில்:)))) பாரிஸ் ரயிலில் பட்டும் திருந்தா மரம் :))))
ReplyDeleteஅடடா தனிமரம் என்னவாயிற்று??கவனமாய் இருங்கள் பாரிஸ் ரயிலில் ..களவாணிகள் அதிகம்..வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி.
Deleteஅட கடவுளே உங்க செல்லத்துக்கும் ஆப்பு வந்ததா
ReplyDelete