Saturday, March 16, 2013

ஆண்களே உஷார்..!திருமணச் சந்தையில் பெண்களின் எதிர்பார்ப்பு பொறியாளர்களே!

    
 
 
 
 நீங்கள் பொறியியல் துறையில் வேலை செய்பவரா? , பொறியியல் படித்துக் கொண்டிருபவரா?, அடிக்கடி வெளிநாடு (onsite ) செல்பவரா?. அப்ப,கவலைய விடுங்கண்ணா உங்களுக்கு கல்யாணம்  ஆகலைனா  கல்யாணத்துக்கு  பொண்ணு ரெடி..
 
எனது இந்த இடுக்கையின் நோக்கம் இன்றைய திருமணச் சந்தையில்(சந்தை என்று எழுத என் விரலுக்கு விருப்பமில்லை,எனினும் சந்தையாகிவிட்ட ஒன்றை அப்படி தான் எழுதியாக வேண்டும் ) பெண்களும், பெண்  வீட்டாரும்  அதிகம் விரும்புவது பொறியியல் படித்த ஆண்களைத் தான் என்பதை எடுத்துரைப்பதே.வீட்டில் பார்த்து முடிக்கும் திருமணத்தை பற்றி மட்டுமே பேசி இருக்கிறேன்.காதல் திருமணத்தை அல்ல.
 
ஊருக்கு ஒரு பொறியாளர் இருந்த காலம் போய் , இன்று தடுக்கி விழுந்தால்  தெருவுக்கு பத்து பொறியாளர் என்று பொறியியல் மீதான  மோகம் பெருகி  விட்டது மக்களிடையே.ஐந்து லட்சம் கொடுத்தேனும் தன்  பையன பொறியியல் கல்லூரியில் சேர்த்திடனும்னு நினைக்கிற பெற்றவர்கள்   ஒரு பக்கம் னா,  பத்து லட்சம் கொடுத்தேனும் தன்  பெண்ணை  ஒரு பொறியாளருக்கு கட்டி வச்சிரணும்னு நினைக்கற பெற்றவர்கள்  இன்னொருப் பக்கம்.
 
பல இடங்களில் பெண்கள் எதிர்பார்கிறார்கள்,     சில இடங்களில் பெண் வீட்டாரும் சேர்ந்து இதையே எதிர் பார்க்கிறார்கள்.
 
அப்படி என்ன தான் இவங்க எதிர்பார்ப்பு..
 
1) பையன் BE படிச்சிருக்கணும்.(அதை படிச்சு முடிச்சானாங்றது வேற விஷயம்.) இந்த BA MA Bsc Msc BEd MEd படித்தவர்கலெல்லாம் எங்க போய் பொண்ணு தேடுவதென்று  தெரியவில்லை.பொறியியல் தவிர வேற எதுவும் பல பேர் கண்ணுக்கு படிப்பாவே தெரிவதில்லை.அப்படி என்ன தான் இருக்கோ என்னால கண்டு பிடிக்க முடியவில்லை .
 
2) பையன் software ல இருந்து அடிக்கடி வெளி நாடு சென்று வந்தால் கேட்டதையெல்லாம் கொடுத்து திருமணம் செய்யவும் தயராக இருக்கின்றனர் சில பெற்றோர்.அது சரி, வாங்கறதுக்கு சில ஆண்களும் தயாராகத் தானே இருக்கிறார்கள். ஒரு காலத்தில் ஆசிரியரை திருமணம் செய்தால் அதிக விடுமுறை கிடைக்கும் என்று இருந்தவர்கள் இன்று பொறியாளரைத் திருமணம் செய்தால் தான் பெருமை என்று நினைக்கின்றனர்.
 
3)  ஒரே பையனா இருந்துட்டா இன்னும் வசதி.ஆறடி கூந்தலையே வேலைக்கு போனதும் maintain பண்ண முடியலன்னு அரை அடிக்கு வெட்டிறாங்க. அவங்களால எப்படிங்க கூட்டு குடும்பத்த maintain பண்ண முடியும்??அதான் பெத்தவங்க பாத்து பாத்து ஒரே பையன் இருக்க வீடா தேடறாங்க.
 
4)  சில ஆண்கள் தான்  social drinker என்று சொல்வதையே பெருமையாக்கி விட்டார்கள் என்றால்,பெண்களும் அதற்கு ஈடு கொடுத்து social drinker ,social smoker என்றால் it doesn't a matter ma என்கிறார்கள்.(ஒரு மனிதனின் பழக்க வழக்கம் வேறு , பண்பு என்பது வேறு.இரண்டையும் நான் குழப்பிக் கொள்வதில்லை.இவர்கள் சொல்வதெல்லாம் பெருமைக்கு செய்யும் பழக்க வழக்கங்கள்)
 
5) பையன்கிட்ட  கார் இருக்கா?, பைக் இருக்கா? இதையெல்லாம்  இன்று  அதிகம் கேட்பதில்லை. இல்லை என்றால்  தான்  இவர்களே  வாங்கித்  தருகிறார்களே . இன்றைய தினம், இவங்க கூப்பிடற இடத்துகெல்லாம்   வர பையன் தயாரா இருக்கணும் .அதான் மிக முக்கியம்.அப்பதானே மூட்டைய கட்டிட்டு எப்பவேணா தனி குடித்தனம் கிளம்ப வசதியா இருக்கும்.
 
திருமண பந்தத்தில் உள்ளத்திற்கும் தனி மனித ஒழுக்கத்திற்கும் இருக்கும் மதிப்பை விட ஏனைய விடயங்களுக்கு மதிப்பு தருவது மனதை வருத்துது.
 
பெற்றதைக் கொண்டு பெருமை தேடிக் கொள்வதே கல்வியே தவிர பெருமைக்காக தேடித் பெறுவதல்ல.பெருமைக்காக பொறியியலைத் தேடித் படிக்காதீர்.அதே பெருமைக்காக பொறியாளரைத் தேடி திருமணம் செய்யாதீர்.
 
மனங்கள் இரண்டு இணைவதே திருமணமே தவிர 
மான்யங்கள் கொண்டு மனதை விலை பேசுவதல்ல.
 
வாழ்க்கை வளம் பெற வேண்டுமெனில்,பண்பின் அடிப்பையில் மட்டுமே உங்கள் வாழ்க்கை துணையைத் தேர்ந்தெடுங்கள்.
 
"மனைத்தக்க  மாண்புடையாள் ஆகித்தற் கொண்டான் 
வளத்தக்காள் வாழ்க்கைத் துணை."
 
இல்வாழ்க்கைக்கு ஏற்ற நற்பண்பு உடையவளாகித் தன் கணவனுடைய பொருள் வளத்துக்கு தக்க வாழ்க்கை நடத்துகிறவளே வாழ்க்கைத் துணை ஆவாள்.
 
 தன் வீட்டில் தங்கை திருமணத்திற்கு காத்திருக்க எதிர் வீட்டில் இருப்பது என் தேவதை என இழுத்து கொண்டுபோய் திருமணம் செய்யும்,சுயநல இளைஞர்கள் இருக்கும் இதே  உலகில் தான் ,தனக்கு வயது ஆனாலும் பரவாயில்லை பெற்றோர் பார்த்துச் சொல்லட்டும் என காத்திருக்கும் இளைஞர்களும் இருகின்றனர்.
 
அவர்களின் உயர்ந்த உள்ளத்தை புரிந்துக் கொள்ளத் தான் பெண்களுக்கோ, பெண் வீட்டாருக்கோ தெரிவதில்லை.
 
 
அன்புடன்,
ஆதிரா 
 
 
 
 
 
 
 
 

22 comments:

 1. Very nice, i am working in singapore and a diploma holder. All the girls want engg. holder.

  ReplyDelete
  Replies
  1. ம்ம்..வருத்தம் வேண்டாம் சகோதரா..எதுவும் கடந்து போகும்..விரைவில் உங்களுக்கு வரன் அமைய வாழ்த்துக்கள்/

   Delete
 2. சமுகத்தில் நடப்பதை எந்த வித ஒளிவுமறைவு இன்றி மிக தெளிவாக உண்மையை எடுத்து சொல்லி இருக்கிறீர்கள். படிக்க இன்ரெஸ்டிங்காக இருந்தது. வாழ்த்துக்கள்

  இப்ப கொஞ்சம் கலாய்க்கலாம்


  உங்க பதிவின் படி எனக்கு இரண்டாம் கல்யாணத்திற்கு வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது காரணம் நான் பொறியாளன் இல்லை.ஹும்ம்ம்ம்ம்ம்ம்

  பொறியல் செய்ய தெரிந்த Chef நானும் ஒரு பொறியாளன் என்று ஏமாற்றி கல்யாணம் செய்யும் வாய்ப்பு உள்ளது. அதனால் பெண்வீட்டார் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

  ReplyDelete
  Replies
  1. ம்ம்..ஆமா ஆமா.. உங்க கிட்டலாம் ஜாக்ரதையாத் தான் இருக்கணும்..கருத்துக்கு நன்றி.

   Delete
 3. Yes am working in UAE as Chemist having Bachelor Degree in Chemistry.. All the girls looking Engineers only.. Now i planned to do MBA in Distance Learning..

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கு நன்றி நண்பரே..மாறி வரும் உலகில் மாறாத மனங்கள் இன்னும் ஆங்காங்கே உண்டு என நம்புவோம்..அவர்களைத் தேடித் பிடியுங்கள்..

   Delete
 4. ஆதிரா, நீங்கள் சொல்வது உண்மையென்றால்....நமது திருமணம்...கலாச்சாரம் எல்லாம் படு கேவலம்; திருமனத்திர்க்கு பெண்களுக்கு தேவை ஆண்கள்; ஆண்கள் செய்யும் வேலையல்ல...

  ReplyDelete
  Replies
  1. செவி வழி வந்த செய்தியோ இல்லை கண் வழி கண்ட காட்சியோ அல்ல நம்பள்கி..என் சகோதரர் ஒருவருக்கு பெண் தேடும் படலத்தில் என் குடும்பம் அடைந்த விரக்தியும்,மோசமான அனுபவமுமே இந்த இடுக்கை..கேவலமாகி விட்டதால் தான் சந்தை என குறிப்பிட்டிருக்கிறேன்.100 க்கும் மேற்ப்பட்ட வரன் பாத்தாச்சு..சொல்லி வைத்தாற் போல் எல்லாம் பையன் BE ah??என்று கேட்கிறார்கள்.என் சகோதரர் 12ம் வகுப்பின் வேதியியல் ஆசிரியர்.அவரின் ஒழுக்கத்திற்கும்,பழக்க வழக்கத்திற்கும்,உடல் நலத்திற்கும் , குடும்ப மதிப்பிற்கும்,உத்தியோகத்திற்கும், ஊதியத்திற்கும் என்னால் முழு உத்திரவாதம் தர முடியும்.ஆனால் பெண் தரத்தான் யாரும் தயாராக இல்லை.

   Delete
 5. மனங்கள் இரண்டு இணைவதே திருமணமே தவிர
  மான்யங்கள் கொண்டு மனதை விலை பேசுவதல்ல.
  உண்மை வரிகள் ஆதிரா,

  ReplyDelete
 6. நல்லதொரு பகிர்வு...

  வலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு வருகை… Followers ஆகி விட்டேன்… தொடர்கிறேன்... இந்த வார வலைச்சர ஆசிரியருக்கு நன்றி...

  உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

  மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/03/blog-post_21.html) சென்று பார்க்கவும்...

  நேரம் கிடைத்தால்... என் தளம் வாங்க... நன்றி…

  ReplyDelete
  Replies
  1. உங்கள் தளத்தை நான் பார்வையிட ஆரம்பித்து வெகு நாட்கள் ஆகிறது..பாராட்டுங்கள் பாராட்டப் படுவீர்கள் என்று சொல்லித் தந்தவராச்சே..எங்க அம்மா சாப்பாட்டை நான் இப்பலாம் குறை சொல்றதே இல்லை...

   என் தளத்திற்கு உங்களை வரவழைத்த வலைசரத்திற்கும் ,அறிமுக படுத்திய தோழி அருணாவுக்கும்,வருகை தந்த உங்களுக்கும் என் நன்றிகள்.

   Delete
 7. ஒருகாலம் அரசாங்க உத்தியோகம்பார்ப்பவர்களுக்கு இருந்த டிமான்ட் இப்போ
  காணவில்லை. பொறியியல் துறைசார்ந்தவர்கள் படு(த்தும்)ம்பாடு பற்றியபதிவு அருமையான நல்லதொருபதிவு.
  கவலைவேண்டாம் ஆதிரா. சகோதரருக்கு நல்லதொரு மனைவி நிச்சயம் கிடைப்பா.

  ReplyDelete
  Replies
  1. வலிமை தரும் வார்த்தைகளுக்கு நன்றி தோழி

   Delete
 8. அன்புச் சகோதரி!
  வலைச்சரத்தின் வழியே தொடுத்திருந்த மலரினைக் கண்டு இங்கு வந்தேன். வந்ததும் வாசத்தில் மெய் மறந்து நின்றேன். அருமை. அழகிய நல்ல நல்ல ஆக்கங்களை இங்கு கண்டேன். மேலோட்டமாகப் பார்த்தேன். பின்னர் வந்து ஆறுதலாகப் படிக்கின்றேன்.

  இது ஒரு அறிமுக தரிசனம். மீண்டும் வருவேன்.
  வாழ்த்துக்கள் சகோதரி!

  ReplyDelete
  Replies
  1. நன்றி சகோதரி அடிக்கடி வந்து இந்த வலைபூவையும் எட்டிப் பாருங்க..

   Delete
 9. வலைச்சர அறிமுகம் வாயிலாக உங்கள் தளத்திற்கு வந்தேன்.
  முதலில் உங்கள் வலைசர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள்.
  வந்து படித்து உங்கள் நடையில் லயித்துப் போனேன். தொடர ஆரம்பித்து விட்டேன்.
  நட்புடன் இணையத்தில் வலம் வருவோம்.

  ReplyDelete
  Replies
  1. நட்போடு நடைபோடுவோம் நன்றி தோழி..

   Delete
 10. எல்லாமே ஒரு பெரிய ரெசெஷன் வரும் வரை தான்! அமேரிக்கா போன்ற நாடுகளில் பத்து வருடத்துக்கு ஒரு முறை தவறாமல் ரெசெஷன் வருகிறது. நம் ஊரில் இதுவரை பெரிய அளவு ரெசெஷன் வரவில்லை. மன்மோகன் / சிதம்பரம் கும்பல் அது எப்படி விடுவோம். முடிந்த அளவு 'வளர்ச்சி' (வீக்கம்) கொண்டு வந்து ரெசெஷனயும் கொண்டு வருவோம் என்று கங்கணம் கட்டிக்கொண்டு அலைகின்றனர். அப்படி ஒரு ரெசெஷன் வரும்போது, இந்த நிலைமைகள் மாறிவிடும்!

  ReplyDelete
  Replies
  1. கருத்துக்கும் வருகைக்கும் நன்றி

   Delete
 11. டாக்டர்களின் கதி என்னவோ?

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கு நன்றி..மருத்துவ துறையில் இருப்பவர்கள் பெரும்பாலும் மருத்துவ துறையில் இருப்பவரையே திருமணம் செய்வார்கள்.அது பெண்களுக்கு நன்றாக தெரிந்திருப்பதால் டாக்டர் மாப்பிள்ளை கேட்பதில்லை...

   Delete