வீட்டுக் குக்கரின் விசில் சத்தத்திற்கு
விரைந்துச் செவிச் சாய்ப்பாள்...
வீதியில் செல்லும் வழிப்போக்கன்
வாய்மொழிக்கும் பட்டனெச் செவிச் சாய்ப்பாள் ..
தொலைவில் அழைக்கும் தொலைப்பேசியைத்
தேடித் தொடர்ந்துச் செவிச் சாய்ப்பாள்..
படபடவெனச் சரிந்து விழும் பாத்திர ஒலிக்கும்
பக்குவமாய் செவிச் சாய்ப்பாள்..
நிறைந்து வழியும் தண்ணீர் தாளத்திற்கும்
தவிப்போடு செவிச் சாய்ப்பாள்..
வண்டிச் சாவியைத் தேடும் மகனின் குரலுக்கும்
வடிவாய் செவிச் சாய்ப்பாள்..
தேநீர் தேடும் கணவனின் கட்டளைக்கும்
தெவிட்டாமல் செவிச் சாய்ப்பாள்..
புத்தகம் எங்கே எனும் மகளின் புலம்பலுக்கும்
புன்னகையுடன் செவிச் சாய்ப்பாள்..
நித்தம் நித்தம் எல்லோர் அழைப்பிற்கும் செவிச் சாய்த்து
நிறைவாய் சேவைச் செய்வாள்..
இவளின் அழைப்பிற்கு மட்டும் ,
"இதோ வருகிறேன்" என எப்போதும் பதில் கிடைப்பதில்லை ..
"இரும்மா வருகிறேன் " என்று மட்டுமே கிடைக்கும்...
அம்மா அழைத்தால் அப்படி அலட்சியம் என்பதில்லை. அது அவளில் இருக்கும் அப்படியொரு அதீத புரிந்துணர்வு. கோபிக்கமாட்டாள் என்னும் நம்பிக்கை. அம்மா என்ரால் பொறுமை அல்லவோ அதுதான்...:)
ReplyDeleteநல்ல கருத்துள்ள கவி ஆதிரா... ரசித்தேன். வாழ்த்துக்கள்!
வருகைக்கு நன்றி தோழி...உண்மை தான் அந்த அதீத புரிந்துணர்வை தான் நான் ஒரு வேளை எனக்கு சாதகமாக்கிக் கொண்டேனோ என்னவோ..!!எப்ப கூப்டாலும் இரு மா னு தான் பதில் சொல்றேன்..ஹி ஹி ..
Deleteஅருமை...
ReplyDeleteஅம்மாவிற்கு ஈடு இணை ஏது...?
வாழ்த்துக்கள்...
ம்ம்..அம்மாவிற்கு இணை அம்மா மட்டுமே..வருகைக்கு நன்றி
Deleteநல்லதொரு கவிதை படித்தேன்.நீங்கள் சொல்லிய பிறகு தான் யோசித்தால் புரிகிறது "இரும்மா " என்பதுதான் அநேகமாக பதில் சொல்வோம். அது ஒரு உரிமையில் சொல்வது.அம்மா புரிந்து கொள்வாள் என்று தான் நினைக்கிறேன்.
ReplyDeleteஅம்மா நிச்சயம் புரிந்துகொள்வாள்..உண்மை தான்..
Delete// இவளின் அழைப்பிற்கு மட்டும் ,
ReplyDelete"இதோ வருகிறேன்" என எப்போதும் பதில் கிடைப்பதில்லை ..
"இரும்மா வருகிறேன் " என்று மட்டுமே கிடைக்கும்...///
_________________________________________
ஆதிரா,
முடிவு பிரமாதம்! முடிவு இன்னும் மிக மிக பிரமாதமாக இருந்திருக்கும் இந்த உடனே" என்ற ஒரு வார்த்தையை சேர்த்து எல்லா இடங்களிலும் சேர்த்து இருந்தால்.எனக்கு இப்படி பட்டி பார்த்து டிங்கரிங் பண்ணி மற்றவர்கள் கவிதையை மேலும் அழகு படுத்த பிடிக்கும். தப்பாக எடுத்துக் கொளவேண்டாம்.
நன்றாக எழுதுகிறீர்கள். அம்மாவைப் பற்றி அழகாக எழுதியுள்ளீர்கள்.
அம்மா என்றால் சும்மவா? நான் என்னைப் பெத்த அம்மாவை சொல்கிறேன்...!
-----------------------------
புத்தகம் எங்கே எனும் மகளின் புலம்பலுக்கும்
'உடனே' புன்னகையுடன் செவிச் சாய்ப்பாள்..
நித்தம் நித்தம் எல்லோர் அழைப்பிற்கும் செவிச் சாய்த்து
நிறைவாய் சேவைச் செய்வாள்..
அதுவும் 'உடனே' செய்வாள்!
இவளின் அழைப்பிற்கு மட்டும் மற்றவர்களிடம் எப்போதும்
"இதோ வருகிறேன்" என பதில் கிடைப்பதில்லை ..
"இரும்மா வருகிறேன் " என்று மட்டுமே கிடைக்கும்...
____________________________
வாங்க நம்பள்கி..நீங்க தாராளமா என் எழுத்துக்களை மாற்றி அமைத்து மெருகேற்றலாம்..ஒரு போதும் தவறாக நினைக்க மாட்டேன்..patent rights லாம் பேச மாட்டேன்..கவலை வேண்டாம்..
Deleteஏதோ எனக்கு தெரிந்ததை கிறுக்கி கொண்டிருக்கிறேன்..திருந்தங்களை எப்போதும் வரவேற்கிறேன்..வருகைக்கும் நேரம் எடுத்து 2 வரிகளை மாற்றி எழுதி காட்டி அழகை சேர்த்ததற்கும் நன்றிகள் நம்பள்கி..
அம்மா பற்றி அற்புதமான கவிதை.
ReplyDeleteநன்றி கிரேஸ்
Deletesuper...
ReplyDeletethanks
Deleteஅன்பைக் கொட்டும் அம்மாவிற்கு இந்த அலட்சியங்கள் ஒரு பொருட்டல்ல
ReplyDeleteம்ம்...அவளின் அளவற்ற சகிப்புத் தன்மையை நாம் சாதகமாக்கிக் கொள்ளக் கூடாதல்லவா??
Deleteசெவி சாய்த்து செவிசாய்த்து ஊமையானாள்
ReplyDeleteஅவள்மேல் வைத்திருக்கும் ஆதீத நம்பிகை தள்ளி போடுகிறது பதிலை
நானும் ஒருமுறையாவது அம்மா கூப்பிட்டால் சட்டென போய் அவள் முன் நிற்க முயற்சிக்கிறேன்.இதுவரை முடியவில்லை.என்னை அறியாமலேயே வந்து விடுகிறது அந்த பதில்.."இரும்மா வறேன் "என்று..
Deleteவருகைக்கு நன்றி.
அம்மா.............அம்மா
ReplyDeleteஇதுதான் அம்மா! மதுதான் கவிதை! ஒலி , ஒளி வேறுபாடு களைக!
ReplyDeleteபிழையை சுட்டிக் காட்டியதற்கு நன்றி ஐயா.திருத்திவிட்டேன்.
Deleteஅழகான பதிவு தோழி!! இதை படிக்கும்பொழுது என்னை என் அம்மா அழைத்த போதும் இதே பதில் தான் என்னிடம் இருந்து அவர்களுக்கு கிடைத்தது!!! பின்பு இதை என் அம்மாவிற்கும் காண்பித்தேன்.
ReplyDeleteவருகைக்கு நன்றி தோழரே
Delete