Saturday, March 23, 2013

இவைகளை நீ சம்பிரதாயங்கள் என்கிறாய் நான் சாட்சிகள் என்கிறேன்..

மண்ணைப் பார்த்து நடந்து வரும் ஆணின் 
மனதிற்கு சொல்லிட வேண்டும் உன் கால் மிஞ்சு..

நிமிர்ந்து பார்த்து நடந்து வரும் ஆணின் 
நெஞ்சத்திற்கு சொல்லிட வேண்டும் உன் நெற்றிக் குங்குமம்...

கண்கள் பார்த்து பேசிடும் ஆணின் 
கவனத்திற்கு சொல்லிட வேண்டும் உன் கழுத்து மாங்கல்யம்...

நீ இன்னொருவனின் இல்லாள் என்று...

கண் மை இட்டு கண்களை அழகாக எடுத்துக் காட்டுவதில் 
காலம் தவறாத நீ கழுத்தில் இருக்கும் மங்கல்யத்தை மறைப்பதேனோ??

குதிகால் செருப்பில் காலை அலங்கரிக்க மறக்காத நீ 
கால் விரலின் மிஞ்சியை மறந்ததேனோ??

தலைவிரி கோலமே நாகரீகமெனும் தத்துவத்தை விரும்பும் நீ 
தலை வகுட்டில் வைக்கும் குங்குமத்தை விரும்பாததேனோ??

இவைகளை நீ சம்பிரதாயங்கள் என்கிறாய் 
நான் சாட்சிகள் என்கிறேன்..

உன்னவனுக்கு மட்டுமே நீ உரியவளாய் இருக்க..
எவர் மனதிலும் நீ மாயம் செய்யாமல் இருக்க..
மறைத்திடாதே ஒரு போதும் இந்தச் சாட்சிகளை..

In the name of modernity, dont ignore our valueable culture and Tradition!
23 comments:

 1. உண்மை சாட்சிகளை மறைப்பதால் தான் குற்றங்கள் அதிகமாகின்றன...வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி

   Delete

 2. வணக்கம்!

  பொண்ணின் பெருமைகளைப் பேசும் வரிகளைக்
  கண்ணின் இமையெனக் காண்!

  கவிஞா் கி. பாரதிதாசன்
  தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

  ReplyDelete
 3. மனதில் தைத்துக் கொள்ள வேண்டிய கருத்துக்கள்...

  ReplyDelete
 4. ஒவ்வொருத்தவரும் மனசாட்சியை மறைக்காமல் இருந்தால் இந்த சாட்சிகளுக்கு அவசியம் இல்லை

  ReplyDelete
  Replies
  1. மனங்கள் இரண்டு இணைந்து மணமுடிக்கவே சாட்சிகள் ஏதும் தேவையில்லை.அக்னியோ,அட்சதையோ,வேதங்களோ, நாதங்களோ,அணிகலன்களோ ஆடம்பரங்களோ,உணவுகளோ, உறவுகளோ ஏதும் வேண்டாம் சாட்சியாக இருவரின் மனசாட்சியே பெரிய சாட்சி ஒரு பெண் மாங்கல்யம் ஏற்க..

   அவ்வாறு ஏற்ற மாங்கல்யமே சாட்சி அவர்களின் இல்லறத்திற்கு..

   அந்த சாட்சியை மறைக்காமல் ,மறக்காமல் இருப்பது தான் அவசியம் என்கிறேன் மதுரைத் தமிழரே...

   Delete
 5. எவர் மனதிலும் நீ மாயம் செய்யாமல் இருக்க..
  மறைத்திடாதே உண்மை வாழ்த்துக்கள்

  ReplyDelete

 6. உன்னவனுக்கு மட்டுமே நீ உரியவளாய் இருக்க..
  எவர் மனதிலும் நீ மாயம் செய்யாமல் இருக்க..
  மறைத்திடாதே ஒரு போதும் இந்தச் சாட்சிகளை..

  சரியாகச சொன்னீர்கள்! வாழ்த்துக்கள்!


  ReplyDelete
 7. மறைக்காமல் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 8. அதிரா,

  நான் படித்திருக்கிறேன். எங்கே எப்போது என்று நினைவில்லை. மெட்டி திருமணமான ஆண்கள் அணியும் பழக்கம். ஆண்கள் தாங்கள் திருமணம் ஆனவர்கள் என்ற அடையாளம் வெளியில் தெரியக்கூடாது என்று தற்போது அணிவதில்லை.

  So many of my wife's friends have questioned me, rather criticized, for NOT wearing a ring at least to identify me as a married man..! I hate jewels, and I don't wear my ring at all.
  மேலும், என் மாமனாரும் எனக்கு மோதிரம் போடலை; என் கல்யாணம் என் செலவு...!

  ReplyDelete
  Replies
  1. உண்மை தான் நம்பள்கி ஆண்களுக்கு இருந்த மெட்டி அணியும் பழக்கம் நம் முன்னோர்கள் காலத்திலேயே காணாமல் போய்விட்டது.மேலும்,தங்களை திருமணமாவதன் போல் காட்டிக் கொள்ள விரும்பும் ஆண்கள் அதிகமாகி விட்டனர்.ஆணுக்கு பெண் நிகர் என்று அவன் செய்யும் தவறுகளை நானும் செய்வேன் என்றால் நாடு தாங்காது.

   நாகரீகம் என்ற போர்வையில் இவைகளை மறைத்து, தன்னை திருமணமாகதவள் போல் காட்டிக் கொள்ளும் பெண்ணுக்கு நன்மைகள் ஏதுமில்லை.தீமைகளே அதிகம்...

   Delete
 9. மனதில் நினைக்க வேண்டிய கருத்துக்கள் ஆதிரா!

  ReplyDelete
 10. உங்கள் ஆதங்கம் புரிகிறது ஆதிரா, ஆனால் கொஞ்சம் கருத்து வேறுபடுகிறேன்.
  //
  உன்னவனுக்கு மட்டுமே நீ உரியவளாய் இருக்க..
  எவர் மனதிலும் நீ மாயம் செய்யாமல் இருக்க..
  மறைத்திடாதே ஒரு போதும் இந்தச் சாட்சிகளை..//

  இந்த அடையாளங்கள் இல்லாவிட்டால் பெண் தனக்கு உரிமை என்று எந்த ஆணும் நினைக்க கூடாது. அந்தச் சமுதாயம் வளர பாடுபட வேண்டுமே தவிர அடையாளங்களை மட்டும் நம்பியிருக்க கூடாது. பெண் கண்ணின் தீர்க்கமும் தன்னை முன்னிறுத்தும் விதமே பெண்ணிற்கு மரியாதை சேர்க்குமே தவிர எந்த அடையாளமும் மதிப்பு சேர்க்காது என்பது என் கருத்து. அடையாளம் இருந்தாலும் சலனப்படும் ஆண்கள் இல்லையா? எல்லாம் அவரவர் மனதில் தான்.
  நான் படித்த இன்னொரு செய்தி, மெட்டி அணிவது கர்ப்பப்பைக்கு நல்லது என்று எங்கோ படித்தேன். அதை விசாரித்துப் பார்க்க வேண்டும்.
  என் கருத்தை தான் பதிவு செய்கிறேனே தவிர உங்கள் பதிவை மதிக்கிறேன்.

  நட்புடன், கிரேஸ்

  ReplyDelete
  Replies
  1. அனைத்து விதமான கருத்துக்களையும் வரவேற்கிறேன்..எனது எந்த ஒரு பதிவாயினும் உங்கள் எதிர்மறைக் கருத்துக்களையும் தயங்காமல் பதிவிடலாம்...மதித்து ஏற்பேன்..

   வரவிற்கும் கருத்துக்கும் நன்றி கிரேஸ்...

   Delete
  2. unmai than கிரேஸ் .....metti anivathu karpamaki irukum penkaluku mikavum nalathu......matru karuthu manikavum... mankalyamum,kumkum um irunthalum ilavitalum penkalai parkum parvai entrum marathu tholzi.....

   Delete