தீ சுடும் எனத் தெரிந்தும்
சுற்றுவதை நிறுத்துவதில்லை
விட்டில்பூச்சி..
வானத்தை தொட முடியாதெனத்
தெரிந்தும் உயரப் பறப்பதை
நிறுத்துவதில்லை பறவைகள்..
மழை நின்ற சிலமணி நேரம்
மட்டுமே வாழ்க்கை எனத் தெரிந்தும்
வருவதை நிறுத்துவதில்லை வானவில்..
இறுதி வரை இணையவே
முடியாதெனத் தெரிந்தும்
இடைவெளியோடு ஓடுவதை
நிறுத்துவதில்லை தண்டவாளம்...
மாலை வந்ததும் மடியப் போகிறோம்
எனத் தெரிந்தும் புன்னகைப்பதை
நிறுத்துவதில்லை பூக்கள்...
இருப்பதையெல்லாம் இழந்துவிட்டப்
பின்னரும் அடுப்பெரிக்க சுள்ளியைக்
கொடுப்பதை நிறுத்துவதில்லை
பட்டை பரம்..
தன்னை எத்தனை முறை
வெட்டிக் கூறுப் போட்டாலும்
வெயிலுக்கு நிழல் தருவதை
நிறுத்துவதில்லை மரங்கள்
மழை மண்ணை முத்தமிட
மனிதன் உதவாவிட்டாலும்
மனிதனுக்கு உதவுவதை
நிறுத்துவதில்லை மழை
இயற்கையிடம் பாடம் படி
இலக்கு என்பது என்னவென்று?
இறுதி வரைப் போராடு..
எதிர் வரும் எதையும்
எளிதில் சமாளிக்க,
ஏமாற்றங்களை ஏற்கக்
கற்றுக்கொள்..
வலிமை கொண்ட நெஞ்சத்தை பார்த்தால்
வருத்தங்கள் எல்லாம் வந்த வழியேத்
திரும்பிவிடும்..
வார்த்தைகள் துள்ளி விளையாடுது கவிதையில் புத்துணர்ச்சி கூட்டுகின்ற கவிதைகள் நன்றி பகிர்வுக்கு ஆதிரா
ReplyDeleteம்ம் பரவாயில்லையே !!கவிதைன்னு ஒத்துக்கொண்டீர்கள்..வருகைக்கு நன்றி தனிமரம்..
Deleteஉற்சாகம் தரும் வரிகள்! ஏற்றமிகு கருத்துக்கள்! மிக ரசித்தேன். நன்று ஆதிரா!
ReplyDeleteவருகைக்கு நன்றி நண்பரே..
Deleteமிகவும் நன்றாக இருக்கு ஆதிரா உங்க கவி. நான் ரசித்து 1முறைக்கு 2முறை படித்தேன்.நன்றாக எழுதுறீங்க.வாழ்த்துக்கள்.
ReplyDeleteநன்றி தோழி.தங்கள் வார்த்தைகள் என்னை இன்னும் நன்றாய் எழுத தூண்டுகிறது..
Deleteநல்ல படங்கள்.நல்ல கவிதை.வாழ்த்துக்கள்/
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி..
Delete''..இயற்கையிடம் பாடம் படி
ReplyDeleteஇலக்கு என்பது என்னவென்று?
இறுதி வரைப் போராடு..''
நல்ல வரிகள்.
இனிய வாழ்த்து.
வேதா.இலங்காதிலகம்.
நன்றி மா
Delete