Friday, March 8, 2013

பல மெய்களும் சிலப் பொய்களும்..



























எனது கிறுக்கல்கள் கொஞ்சம் புடிச்சிருந்தா கருத்துரையிடுங்க..ரொம்ப புடிச்சிருந்தா பரிந்துரையிடுங்க...

நன்றி 
-ஆதிரா 

9 comments:

  1. அழகான படங்களும் அதற்கான வரிகளும் அருமை.பாராட்டுக்கள்..

    ReplyDelete
  2. வணக்கம்!

    மலரின் சிரிப்பை வடித்த கவிதை
    நிலவின் ஒளியை நிரைத்து!

    அன்னையை எண்ணி அளித்த கவியடிகள்
    முன்னைத் தமிழின் மொழி!

    பண்பிலான் பெற்ற படிப்பெல்லாம் பாழ்க்குப்பை!
    அன்பிலான் நெஞ்சும் அது!

    காலத்தை எண்ணிக் கடமை புரிந்திட்டால்
    ஞாலத்தை வெல்வார் நவில்!

    நிலவுதன் ஊடல் நிறையிருள் என்றீா்!
    உளம்மகிழ் கற்பனை ஊற்று!

    கட்டிவரும் சேலைக்குள் கொட்டிவரும் காதலால்
    முட்டிவரும் மோக மொழி!

    பெண்ணின் உளறலைப் பேசுகின்ற சொல்யாவும்
    கண்ணில் கமழும் கவி!

    அன்பெனும் நற்பிடிக்குள் ஆட்படும் இவ்வுலகம்!
    இன்பெனும் வாழ்வை இசைத்து!

    ஒப்பனை இன்றி ஒளிரும் அவளழகு
    கற்பனை நல்கும் களம்!

    வீழ்ந்தேன் சரிந்தேன் வியப்புறும் பா..படித்து
    ஆழ்ந்தேன் அகமே அலா்ந்து!

    உன்னைப் படமெடுத்து உற்றுச் சுவைத்திட்டான்!
    என்னை இழுக்கும் எழுத்து!

    காதலின் பொன்மொழியாய்க் கட்டிய சொற்களை
    ஓதும் உலகம் உவந்து!

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete

  3. இந்தப் பதிவில் உள்ள
    ஒரு சில இலக்கணக் குறிப்புகளைச் சொல்கிறேன்
    மனத்துள் பதிவுசெய்து கொள்ளவும்

    1
    அசந்து
    புரிந்து
    செய்து
    ஆகிய சொற்கள் உகரயீற்று வினையெச்சம்
    இவ்விடத்தில் வல்லினம் மிகாது

    2
    அப்படி
    இப்படி
    எப்படி ஆகிய சொற்களின் பின் வல்லினம் மிகும்
    மற்றப் படிகளின் பின் வல்லினம் மிகாது
    அடிக்கடி வல்லினம் மிகாது

    3.
    முயற்ச்சித்து என்பது தவறு
    முயற்சி என்றே எழுத வேண்டும்
    ற்ச் - இரண்டு வல்லின எழுத்துக்கள் தமிழில் இணைந்து வருவதில்லை

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு


    ReplyDelete
  4. அருமையான கவிதைகள் வரிகள், அழகான படங்களுடன்...உங்கள் வலைப்பதிவிற்கு வந்ததில் மகிழ்ச்சி, என்னுடைய தளத்திலிருந்து முயன்றபோது தங்கள் வலைப்பதிவு வரவில்லை...அருணா செல்வத்திற்கு நன்றி!

    ReplyDelete
  5. அனனத்து கவிதைகளும் கொஞ்சுகின்றன அருமை முக்கியமாய் கடைசி கவிதையின் உண்மை

    ReplyDelete
  6. anaithum arumai tholzi...kuripaka anaiyin annam

    ReplyDelete