Sunday, June 23, 2013

எதிர் மறையில் இருக்கும் நேர்மறை தெரிந்தால் எல்லாம் இங்குச் சுகமே !!




அழுவதுக் கூடச் சுகம் தான் 
அழவைத்தவரே அருகில் இருந்து 
சமாதானம் செய்தால்...

காத்திருப்பது கூடச் சுகம் தான் 
காக்கவைத்தவர் அதற்கு தகுதி 
உடையவரானால்..

பிரிவு கூடச் சுகம் தான்
பிருந்திருந்த காலம் அன்பை 
இன்னும் ஆழமாக்கினால்..

சண்டைக் கூடச் சுகம் தான் 
சட்டென முடிக்கு கொண்டு வரும் 
சகிப்புத் தன்மை இருந்துவிட்டால்..

பொய்கள் கூடச் சுகம் தான் கேட்பவர் 
முகத்தில் புன்னகையை மட்டும் 
வரவழைத்தால்..

ஆத்திரம் கூடச் சுகம் தான் உரிமையையும் 
அக்கறையையும் மட்டும் 
வெளிப் படுத்தினால்..

விட்டுக் கொடுப்பது கூடச் சுகம் தான் 
விவாதத்தை விட உயர்ந்தது உறவு 
என்றப் புரிதல் இருந்துவிட்டால்..

துன்பம் கூடச் சுகம் தான் 
உண்மையான அன்புக் கொண்ட  நெஞ்சத்தை
உணர்ந்துக் கொள்ள உதவினால் ..

தோல்விக் கூடச் சுகம் தான் 
முயற்சியின்  தீவிரத்தை இன்னும் 
அதிகப் படுத்தினால்..

தவறுக் கூடச் சுகம் தான் 
தவறாமல் தவறிலிருந்து பாடம் 
கற்றுக்  கொண்டால்..

மொத்தத்தில் வாழ்வில் எல்லாம் சுகம் தான் 
எதிர்மறையில் இருக்கும் நேர்மறையைத் 
தேடித் தெரிந்து நம்மைத்  தேற்றிக் கொண்டால்...




5 comments:

  1. நல்லதொரு கவிதை.. :)

    ReplyDelete
  2. எதிர்மறைகளை நேர்மரைகலாக ஆக்கும் வழிகளை சொல்ல்விட்டீர்கள்
    நல்ல கருத்துக்கள்

    ReplyDelete
  3. இந்தப் பதிவுக்கு பின்னூட்டம் போடாம விடுறதுகூட ஒரு சுகம் தான் - ஆதிரா கோவிக்கலைன்னா :))

    வாவ்வ்வ்வ்வ்! அருமையா சொல்லியிருக்கீங்க! மைனஸ் ல ப்ளஸ் காணணும்கறது இதுதானோ?

    ReplyDelete
  4. எல்லாமே சுகம்தான் இங்கு நீங்கள் தந்திருக்கும்
    எல்லாமே சுகம்தான்!...

    கவியில் காட்டிய கற்பனை அற்புதம்
    எல்லாமே சுகம்தான் தோழி!
    எல்லாமே சுகம்தான்!

    அழகிய வரிகள். அருமையான கவிதை!
    வாழ்த்துக்கள் தோழி!

    த ம.2

    ReplyDelete
  5. ஆஹா அருமை கவிதை தோழி!ம்ம்

    ReplyDelete