காலதாமதமாய் செய்யும் எந்த ஒரு
காரியமும் அதன் முழுப்பலனை அடைவதில்லை.
சரியான நேரத்தில் கேட்கப்படாத மன்னிப்பும்
கொடுக்கப்படாத மன்னிப்பும் பயனற்றது.
ஒருவனின் அறியாமை இன்னொருவனின்
ஆயுதம் ஆகிறது.
வாதியும் பிரதிவாதியும் இறந்துவிட்ட பின்னரும்
வழக்கு மட்டும் வாழ்கிறது இன்னும் வாய்தாவுடன்.
நீ தொடர்ந்து செல்லும் ஒன்று உன்னை மதிக்காவிட்டால்
ச்சி போ என்று திரும்பி நட அது உன்னை தொடர்ந்து வரும் உன்
நிழல் போல்.
தன் உரிமைகள் அறியா மனிதன் வேரற்ற மரமாகிறான் .
~ஆதிரா
"நீ தொடர்ந்து செல்லும் ஒன்று உன்னை மதிக்காவிட்டால் ச்சி போ என்று திரும்பி நட அது உன்னை தொடர்ந்து வரும்" உன் நிழல் போல்.
ReplyDeleteSindhikka vaitha varigal.