பிடிக்கிறது..என்னை அழகியென்று வர்ணிக்கும்
உன் பொய்கள் ஒவ்வொன்றும் ரொம்பப் பிடிக்கிறது..
பிடிக்கிறது..என்னை அழவைக்கும் உன் வார்த்தைகள் வார்த்த வலி ரொம்பப் பிடிக்கிறது..
பிடிக்கிறது..என்னைச் சிவக்க வைக்கும் உன் சில்லென்ற சில்மிஷங்கள் ரொம்பப் பிடிக்கிறது..
பிடிக்கிறது..என்னைத் தோள் சாய்த்து தோல்வி பயம் நீக்கும் உன் தோள்கள் ரொம்பப் பிடிக்கிறது..
பிடிக்கிறது.. நீ கடந்துச் செல்லையில் என்னைக் கடத்திச் சென்ற ஓரக்கண் பார்வை ரொம்பப் பிடிக்கிறது..
பிடிக்கிறது..பெரியச் சண்டைக்குப் பின் சிந்திடும் உன் சின்னப் புன்னகை ரொம்பப் பிடிக்கிறது..
பிடிக்கிறது..என் பேசா மௌனத்தையும் மொழி பெயர்க்கிற உன் புரிதல் ரொம்பப் பிடிக்கிறது..
பிடிக்கிறது..பிடித்தவளுக்காக உனக்குப் பிடித்ததைக் கூட நீ விட்டுக் கொடுப்பது ரொம்பப் பிடிக்கிறது..
பிடிக்கிறது..அருகில் இல்லாத போதும் என் நினைவுகளை ஆழமாய் சுமக்கும் உன் நெஞ்சம் ரொம்பப் பிடிக்கிறது..
பிடிக்கிறது..இன்னல் தான் வாழ்க்கை என்றாலும் என்னை இழக்கும் எண்ணமில்லாத உன் உறுதி ரொம்பப் பிடிக்கிறது...
குறிப்பிட்டுச் சொல்ல முடியாமல் ஒவ்வொரு வரியும் எனக்குப் பிடிக்கிறது..அருமை!
ReplyDeleteஅனைத்தும் பிடிக்கிறது... முக்கியமாக :
ReplyDelete/// என்னை இழக்கும் எண்ணமில்லாத எ(உ)ன் உறுதி ///
பிரமாதம்... இது தான் வேண்டும்...
வாழ்த்துக்கள்... நன்றி...
pidikirathu, kavukalaium karpanaikalaium iniya kavithaiya koortha unkala kavithaiyaium romba pidikirathu.... :)
ReplyDeleteநன்றி jans
Deleteஎன்னவோ என்னவோ பிடிச்சிருக்கு எனக்கும் பிடிக்கவே செய்கிறது வரிகள்.. அருமைங்க.
ReplyDeleteஹ ஹா நன்றி தோழி
Deleteரொம்ப பிடிச்சிருக்கு.
ReplyDeleteவாழ்த்துக்கள் ஆதிரா.
நன்றி தோழி
Delete