ஓர் மாலை மஞ்சள் நேரத்திலே
மாமரத் தோப்பினிலே
மாங்குயில் இசைக்கையிலே
மாமனவன் அருகினிலே
மங்கை இவள் நாணத்திலே
மயங்கி நின்றால் மனதினிலே
மண்ணைப் பார்த்து நின்றவளை
மனக் கண்ணில் எடைப் போட்டவன்
அவள் மல்லிகைப் பூ வாசத்திடம்
மனமே நீ சிக்கிடாதே என மனதுக்குள்
நொந்துக் கொண்டான் மெல்ல உள்ளே
சிரித்துக் கொண்டான்..
தடைப் போட்ட வெட்கத்தை
தள்ளிக் கொஞ்சம் வைத்தவள்
தன் மன்னவன் முகம் பார்க்க
மைவிழி ஏரெடுத்து அவன்
மௌனம் .களைய முறையிட்டாள்..
மௌனம் கலைந்த மன்னவன்
முல்லை பூ சிரிப்புடன் முதலில்
முனைந்தான் கேள்வி ஒன்றை..
என்ன இன்று பகலில் நிலவு?
என்னருகிலேயே!! அதுவும்
இவ்வளவு நெருக்கத்தில்..!!
சின்னதொரு புன்னகையில்
சிட்டாய் அவள் பதில் சொன்னாள்.
ஒளி கொடுத்தச் சூரியனுக்கு ஒரு
தினமேனும் நன்றி சொல்ல
இந்தத் திங்கள் இன்று பகலில்
வந்தேன்..
உன் இதழால் சொல்லும் வார்த்தை விட
எழுதும் வார்த்தை எத்தனை அழகென்று
நீ அறிவாயா?
ஒரு முறை எழுதிவிட்டுச் செல்..
மறு முறை இந்த நிலவு தரிசனம்
தரும் வரையில் நித்தம் படித்து
நெஞ்சுக்குள் பூத்திருப்பேன்..
அச்சம் வந்து அவளைக் கொல்ல
அப்படியே நின்றிருந்தாள்..
அவள் வார்த்தை எழுதக் காத்திருந்தவன்
அருகில் வந்துக் கைபிடித்தான்..
வேங்கை அவன் கைப் பட்டதும்
மங்கை அவள் சிவந்துப் போக
அவள் சிவப்பழகை பார்த்திட்ட
மஞ்சள் வெயில் மேகம் கொஞ்சம்
கோபம் கொண்டுக் கருத்துப் போக
கார்மேகம் வந்துச் சூழ்ந்துக் கொள்ள
கண்சிமிட்டும் நேரத்தில் மழை வந்து
கலைத்திட்டது அவன் பெற
இருந்த வார்த்தையை....
உண்மையை சொல்ல வேண்டுமென்றால்...
ReplyDeleteகவிதையை விட நீங்கள் அழகாக இருக்கிறீர்கள்; உங்கள் படத்தை நீங்கள் பொது வெளியில் போடுவதை தவிர்ப்பது நலம்; எதுக்கும், அம்மா கிட்டே சொல்லி சுத்திப்போட சொல்லுங்கள்...ஆதிரா!
ஹா ஹா ஹா..இம்புட்டு அழகா இருக்கும் போதே தெரியலையா??நம்பள்கி இது நான் இல்லைன்னு..இப்படி ஏமாந்துடிங்களே!!.இது ஒரு ஓவியம் என்றால் நம்ப முடிகிறதா??அது தான் ஓவியர் இளையராஜாவின் திறமை ( search for ilayaraja paintings in google , you ll find it )
Deleteநான் மிகவும் ரசித்து வியக்கும் ஓவியம் இது..என்ன ஒரு நளினம் அந்தப் பெண்ணிடம்...!!!
எங்க அம்மாகிட்ட சொல்லி இந்த அழகு புள்ளைக்கு கண்டிப்பா சுத்தி போடச் சொல்றேன்.(கடைசில என் கவிதைய படிச்ச மாறி தெரியல..)
அது என்னமோ. இந்த படத்துல இருக்கறது நீங்க தான். நீங்க என்ன சொன்னாலும் நாங்க நம்ப மாட்டோம்.
Delete/// என்ன இன்று பகலில் நிலவு...?
ReplyDeleteஎன்னருகிலேயே...! ///
ரசித்தேன்... தொடர வாழ்த்துக்கள்...
நன்றி...சார்
Deleteதடைப் போட்ட வெட்கத்தை
ReplyDeleteதள்ளிக் கொஞ்சம் வைத்தவள்
தன் மன்னவன் முகம் பார்க்க //புரிந்து கொண்டேன்
ம்ம்...வருகைக்கு நன்றி கவிஞரே
Deleteதெரிஞ்சேதான் எழுதி பின்னிட்டிங்க.. சூப்பர்...!
ReplyDeleteஅழகாய் கற்பனை தோன்ற
ReplyDeleteஅணியாய் சொற்களால் தூவி
வரைந்தாய் கோலம் நன்றாய்
வாழ்வெனும் காதல் காவியமே!
அருமை.! நல்ல மெல்லிய காலைக்காற்றுப்போல சில்லென தழுவிச்சென்ற சிருங்கார ரசனைக் கவிதை.
ரசித்தேன். வாழ்த்துகள் தோழி!
த ம. 3
என்ன இன்று பகலில் நிலவு?
ReplyDeleteஎன்னருகிலேயே!! அதுவும்
இவ்வளவு நெருக்கத்தில்..!!
அழகான நிலவு ..!
ஆம்..அழகான நிலவு தான் இவள்..நன்றி தோழி
Deleteஎன்ன இன்று பகலில் நிலவு?
ReplyDeleteஎன்னருகிலேயே!! அதுவும்
இவ்வளவு நெருக்கத்தில்..!!//
மிகவும் ரசித்தேன்
ஓவியத்தையும் அதற்கான
அற்புதமான கவிதையும்
தொடர வாழ்த்துக்கள்
super tholzi..... தடைப் போட்ட வெட்கத்தை
ReplyDeleteதள்ளிக் கொஞ்சம் வைத்தவள்
தன் மன்னவன் முகம் பார்க்க /// mmm nice.....valthukal tholzi thodarunkal....