Thursday, May 9, 2013

நன்றி ம்மா , நன்றி ப்பா







1) என் கையில் ஒரு பொம்மையைக் கொடுத்து ஓரமாய் உட்கார வைத்து என்னையும் ஒரு பொம்மையைப் போல் வளர்க்காததற்கு நன்றி..


2) நான் கேட்டதை விட அதிகமாக என் கையில் திணிக்காமல் ஏனைய நேரங்களில் இல்லை என்ற பதில் தந்ததற்கு நன்றி..


3) நான் எங்கு செல்கிறேன் யாருடன் பேசுகிறேன் என்று கவனித்து வளர்த்ததற்கு நன்றி..


4) என் முகம் கொஞ்சம் சுருங்கிட்டால், உடனே அதன் காரணம் அறிய முயர்ச்சித்ததற்கு நன்றி..


5) பள்ளி முடிந்து வந்தால் படி படி என்றென்னை கொடுமை செய்யாமல் இருந்ததற்கு நன்றி..


6) டிவி பார்க்க கூடாது , யாருடனும் பேசக் கூடாது என்றென்னை சிறையில் அடைத்து பத்தாம், பனிரெண்டாம் பொதுத்தேர்விற்கு தயார் செய்யாததற்கு நன்றி..


7) படிப்பு விடயத்தில் என்னை என் போக்கிற்கு விட்டு வளர்த்ததற்கு நன்றி..


8) ஒன்றாய் அமர்ந்து சாப்பிடும் பழக்கத்தை கற்றுத் தந்ததற்கு நன்றி..


9) நீ இதை கற்றுக் கொள் அதைக் கற்றுக் கொள் என்று எப்போதும் ஆலோசனை சொல்லி சொல்லி எனக்கு வெறுப்பை உண்டாக்காமல் வாழ்க்கைப் பாடத்தை மட்டுமே கற்றுத் தந்ததற்கு நன்றி..


10) சைக்கிள் முதல் scooty வரை ,சமையல் முதல் வீட்டு வேலை வரை எல்லாவற்றையும் நானே விழுந்து எழுந்து கற்றுக் கொள்ளுவதை தூரமாய் நின்று ரசித்ததற்கு நன்றி..


11) என் விருப்பம் போல் உடையணிய என்னை அனுமதிக்காததற்கு நன்றி..


12) ஒரு வயது வரை என்னை அடித்து உதைத்து வளர்த்ததற்கு நன்றி..


13) நான் எது செய்தாலும் சரியாக இருக்கும் என்ற நம்பிக்கை வரும் வரை என் கைகளை இறுக்கப் பிடித்திருந்தமைக்கு நன்றி..


உங்களின் இல்லை என்ற பதிலால் இன்று எது கிடைக்காவிட்டாலும் நான் அழுவதில்லை.இன்று நான் எதுவாய் இருக்கிறேனோ அது உங்கள் வளர்ப்பினால் தரப்பட்டது..


நன்றி ம்மா , நன்றி ப்பா.


12 comments:


  1. வணக்கம்!

    தந்தை அளித்த தகைமையை இங்குரைத்துத்
    சிந்தை புகுந்தீா் செழித்து!

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete
  2. எங்க அப்பாவும் இப்படித்தான்.. நன்றி சொல்கிறேன் உங்களுக்கும், நல்ல அப்பாக்களுக்கும்!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி தோழி

      Delete
  3. Replies
    1. எனக்கு புரியலையே என்ன சொல்றிங்கன்னு

      Delete
    2. உங்களுக்கு தமிழ் மண ஒட்டு போட்டிருக்காங்க.அதைத்தான் சுருக்கமா சொல்லறாங்க..இதனால உங்க பதிவு நிறையப் பேர் படிக்கறதுக்கு வாய்ப்பு இருக்கு.

      Delete
  4. நான் எதுவாய் இருக்கிறேனோ அது உங்கள் வளர்ப்பினால் தரப்பட்டது..

    அருமையான நன்றி அறிவிப்பு ....

    ஈன்றபொழுதில் பெரிதுவக்கும் அந்த பதிவைப் படித்ததும் ...வாழ்த்துகள்...!

    ReplyDelete
  5. படத்தில் உள்ள கவிதை நெகிழ வைத்தது.
    நீங்கள் நன்றி சொன்ன விஷயங்கள் எல்லாம் கவனிக்கத் தக்கவை

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் த.ம-1 விளக்கத்திற்கும் நன்றி T.N

      Delete
  6. நீங்கள் சொல்லியிருக்கும் நன்றி யாவரையும் படிக்கத் தூண்டும் நன்றி. படிக்க வேண்டிய நன்றி.
    நன்றியைப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    ReplyDelete