Saturday, March 2, 2013

இளைஞர்களே இளைஞிகளே எது நாகரீகம்??தெரிஞ்சுக்குங்க..புரிஞ்சுக்குங்க...

கொண்டுவந்த  அழகு எல்லாம் 
கொண்டவனுக்கு மட்டும்னு தெரிஞ்சுக்க.. 


இறுக்கிப்  பிடித்த  உடையில் ஒரு 
இன்பமில்லை புரிஞ்சுக்க..


உள்ளாடை வெளியேத்  தெரிவது 
வெட்கமுன்னு தெரிஞ்சுக்க..

அவிழ்ந்து  விழும் கால்சட்டையில் ஒரு 
அழகுமில்லை புரிஞ்சுக்க..

பாதம் பார்த்து நடப்பதொரு 
பாவமில்லை தெரிஞ்சுக்க..

நீ நிமிர்ந்து நடக்கும் நடையில் ஒரு 
நேர்மையில்லை புரிஞ்சுக்க..

பிடல் கேஸ்ட்ரோ பேசும் முன்னே உன்னைப்  
பெத்தவனைத் தெரிஞ்சுக்க..

நீ பெத்தெடுக்கும் பிள்ளை வந்து உன்னைப் 
பேசும் புரிஞ்சுக்க..

காதலுக்கு மட்டும் தான் நீ 
கருச் சுமக்கனும் தெரிஞ்சுக்க..

காமத்துக்கு என்றும் நீ ஒரு 
கருவியல்ல புரிஞ்சுக்க..

உள்ளம் என்பதை உள்ளங்கையின் 
உள்ளடக்கத் தெரிஞ்சுக்க..

உணர்ச்சிப் பசிக்கு உண்ணும் உணவு 
உபதை தரும் புரிஞ்சுக்க..

பட்டப் படிப்பு படிப்பது மட்டும் 
பகுத்தறிவல்ல தெரிஞ்சுக்க..

படிக்காதவன் உன்னை விடப் 
பாசக் காரன் புரிஞ்சுக்க..

கடிவாளமென்பது மனசுக்கு மட்டும் 
மனசாட்சிக்கல்ல தெரிஞ்சுக்க..

தனம் பெற்றுத்  தாரம் பெறுவது 
தன்மானமில்லை  புரிஞ்சுக்க...

கடற்கரையில் கட்டிலுடுவது 
காதலல்ல தெரிஞ்சுக்க...

காத்திருந்த காதல் மட்டுமே 
கரைச் சேரும் புரிஞ்சுக்க..

நிலவை மட்டும் ரசிந்திருந்தா ஒரு 
நிம்மதியில்லை தெரிஞ்சுக்க..

நிலாச்சோறு ஊட்டியவளையும் 
நெஞ்சுலவைக்கணும் புரிஞ்சுக்க..

நாகரீகம் என்பதென்ன??அதை முதலில்  தெரிஞ்சுக்க..
நீ செய்யும் செயலுக்கெல்லாம் அதுப்  பெயரல்ல 
புரிஞ்சுக்க...







21 comments:

  1. எனக்கு நாகரிகம் வேண்டாமுங்க.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி ஐயா..

      Delete

  2. வணக்கம்!

    ஏழை பகரும் இனிய மொழிச்சொற்கள்
    தாழைபோல் மணக்கும் தழைத்து!

    தெரிந்து..கொள்! புரிந்துகொள்! என்றே இங்குத்
    தெளிதுள்ள கருத்துக்கள் தேனே என்பேன்!
    வரைந்து..கொள் நெஞ்சத்துள் வல்ல நுால்கள்
    வடித்துள்ள வளா்நெறியை! வாழ்க்கை ஓங்கும்!
    விரைந்து..செல் வினைமுடிக்க! விதியை எண்ணி
    வீட்டுக்குள் சிறைப்பட்டு வாழ்தல் வாழ்வா?
    கரைந்து..சொல் ஆதிராவி்ன் கவிதைப் பார்வை
    கவியரசன் பாரதிபோல் ஒளிரும் நன்றே!

    கவிஞா் கி. பாரதிதாசன்

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி ஐயா..

      Delete

  3. வணக்கம்!

    ஏழை பகரும் இனிய மொழிச்சொற்கள்
    தாழைபோல் மணக்கும் தழைத்து!

    தெரிந்து..கொள்! புரிந்துகொள்! என்றே இங்குத்
    தெளிதுள்ள கருத்துக்கள் தேனே என்பேன்!
    வரைந்து..கொள் நெஞ்சத்துள் வல்ல நுால்கள்
    வடித்துள்ள வளா்நெறியை! வாழ்க்கை ஓங்கும்!
    விரைந்து..செல் வினைமுடிக்க! விதியை எண்ணி
    வீட்டுக்குள் சிறைப்பட்டு வாழ்தல் வாழ்வா?
    கரைந்து..சொல் ஆதிராவி்ன் கவிதைப் பார்வை
    கவியரசன் பாரதிபோல் ஒளிரும் நன்றே!

    கவிஞா் கி. பாரதிதாசன்

    ReplyDelete
  4. ரசிக்கும் படியான எழுத்து! அனைவருக்கும் ஏற்ற, பயன்தரும் கருத்துகள்! கண்டபடி ஆடை அணிந்து இஷ்டப்படி திரிவது அல்ல நாகரீகம் என்பதை பளிச்சென்று உணர வைச்சுட்டீங்க. ரொம்ப ரசித்தேன்! அருமை!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்திற்கும் நன்றி நண்பரே..

      Delete

  5. வணக்கம்!

    பாதம் பார்த்து நடப்பதொரு
    பாவமில்லை தெரிஞ்சுக்க..

    நீ நிமிர்ந்து நடக்கும் நடையில் ஒரு
    நேர்மையில்லை புரிஞ்சுக்க..

    மேலுள்ள இரண்டு கருத்துக்களும்
    முன்னோர் உரைத்த கருத்திற்கு எதிர்நிலையில் உள்ளன

    மகாகவி பாரதி
    நிமிர்ந்த நடையும்
    நோ்கொண்ட பார்வையும் வேண்டுமென உரைக்கின்றான்!

    பெண்ணியலுக்குத் தடைபோடுகின்ற அடிகள் இவை!

    மற்றுமுள்ள அனைத்து அடிகளும் அருமை
    ஓசை அறியாத காரணத்தால்
    ஒவ்வொரு அடியும் ஒவ்வொரு ஓசையில் உள்ளது

    அனைத்து அடிகளும் ஓரே ஓசையில் அமைந்தால்
    இக்கவிதை மிகவும் இனிப்பை அளிக்கும்!

    ReplyDelete
  6. மிக அழகாகவும் தெளிவாகவும் எளிமையாகவும் சொல்லி இருக்கிறீர்கள்... மிக மிக அருமை... நான் மிகவும் படித்து ரசித்து மகிழ்ந்தேன்.. நன்றி

    ReplyDelete
    Replies
    1. நன்றி மதுரைத் தமிழரே...

      Delete
  7. நீ பெத்தெடுக்கும் பிள்ளை வந்து உன்னைப்
    பேசும் புரிஞ்சுக்க..

    நாகரீகக்கோமாளி..!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி தோழி..

      Delete
  8. ஆஹா ஆஹா என்ன ஒரு அருமையான எழுத்து நடை? சொல்வீச்சு? ரசனையான வரிகள் !

    இன்றைய நாகரீக உடை மோகத்துக்குச் செருப்படி!

    அருமையான கவிதை ஆதிரா!

    ReplyDelete
  9. "நிலவை மட்டும் ரசிந்திருந்தா ஒரு
    நிம்மதியில்லை தெரிஞ்சுக்க..

    நிலாச்சோறு ஊட்டியவளையும்
    நெஞ்சுலவைக்கணும் புரிஞ்சுக்க"..

    எல்லோரும் உணர வேண்டிய பாடம்

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி அண்ணா...

      Delete
  10. உங்கள் பாட்டில் இலக்கணப் பிழை உள்ளது.
    நீங்கள் எந்த காலத்தில் இருக்கிறீர்கள்;
    நீங்கள் வசிப்பது தமிழ் நாட்டில் தானா?

    நிலாச்சோறு தவறு...

    நிலாரைஸ் என்பதே சரி...!

    ReplyDelete
    Replies
    1. நான் கூட ஏதோ நிஜமான இலக்கண பிழைய கண்டு புடிச்சுடிங்கலோனு பயந்தேபோயிட்டேன்..வருகைக்கு நன்றி

      Delete
    2. அந்த அளவுக்கு தமிழ் அறிவு லேதண்டி!
      இலக்கணம் என்ற சொல்லுக்கே, மூன்று சுழி 'ண' வா அல்லது இரண்டு சுழி 'ன' வா என்று....பூ போட்டு பார்த்து எழதும் அறிவு எமது தமிழ் அறிவு...!

      Delete
    3. நம்பள்கி! //நிலாச்சோறு தவறு...
      நிலாரைஸ் என்பதே சரி.//
      உங்களுக்கும் தமிழ் சரியா தெரியல.
      மூன் ரைஸ் னு சொல்லணும்

      Delete
    4. மேலை நாடுகளில் இருந்து எது தேவை இல்லையோ அதை எடுத்துக்கொள்கிறார்கள்.அவர்களிடம் உள்ள பல நல்ல விஷயங்களை கடை பிடிப்பதில்லை.
      எளிமையான அழகான சொல்லாடல்.

      Delete