கட்டழகியின் கண்களைப் பார்த்து
காதல் சொன்னால் கடுங்கோபம்
கொண்டென்னை எரிப்பாயோ??
மண்ணைப் பார்த்து உன்னை
மணமுடிக்க ஆசை என்றால்
மனதால் கோழை என்பாயோ??
தொடாமல் என்னை தொட்டவளிடம்
தொலைவில் நின்று தொலைபேசியில்
சொன்னால் தொடநடுங்கி என்று
நினைப்பாயோ??
அணைத்துச் சொன்னால் அலைகிறேன்
கவிதையாய் பிறந்தவளுக்கு
காகிதத்தில் கவிபேசி கண்படும்
இடத்தில் வைத்து விட்டால்
கடன் வாங்கிய கவிதை என்று
இதயம் திருடியவளுக்கு இதயம்
பதித்த வாழ்த்து அட்டையில் என்
இதழ்கள் பதித்து இடையில் ரோஜா
இதழ்கள் இணைத்து உன் முன்
மண்டியிட்டுச் சொன்னால்
சினிமாக் காட்டறான் என்று
சிலுத்துக் கொள்வாயோ??
என்னைக் கேட்காமல் என்னுள்
வந்தவளுக்கு எட்டடி மாடியில்
ஏறி நின்று ஏத்தக் குரலில்
சொன்னால் ஏரெடுத்தும் பார்க்காமல்
பைத்தியம் என்று பட்டம் கட்டிடுவாயோ??
என்னால் சொல்ல முடியாததை
என்னவளுக்கு என் தோழன் மூலம்
தூது விட்டுச் சொன்னால்
காதலுக்கு வைக்கில் வைத்தவனை
வரச்சொல் என்று வைரமுத்து பானியில்
வஞ்சிடுவாயோ??
மூளையைக் கசக்கி முழி பிதுங்க
முயற்சித்தாலும் ஒரு முடிவுக்கு
மட்டும் வர முடியலடி..
நெஞ்சுக்குள்ள புலுங்கறேன்டி
நித்திரையின்றி தவிக்குறேன்டி
நித்தம் நித்தம் சாவுறேன்டி உன்
நினைப்பில் மட்டும் வாழுறேன்டி..
நீயே சொல்லடி நறுக்குன்னு ஒரு
நல்ல யோசனை எப்படி சொல்லி
புரியவைக்க இந்த புத்திக்கெட்டவனின்
புரியாக் காதலை...
கன்னத்தில் ஒன்று கொடுத்துவிடு.
ReplyDeleteகண்கலங்க பார்க்கும் பொழுது
காதல் பெருக்கெடுக்கும்
கண்ணீருடன் கலந்து!
நச்சுன்னு ஒரு யோசனை சொல்லிடிங்க தோழி..நன்றி வருகைக்கும் யோசனைக்கும்..
ReplyDeleteஇதயம் திருடியவளுக்கு இதயம்//ஆஹா என்ன சிந்தனை.அருமை
ReplyDeleteநன்றி தோழரே ..
Deleteகன்னத்தில் என்ன அடியா ?
ReplyDeleteசொல்லாக் காதலிலும் சுகம் இருக்கும்.
ஆம் தோழி!!சொல்லாக் காதலிலும் சுகம் உண்டு..நன்றி
Deleteநீயே சொல்லடி நறுக்குன்னு ஒரு
ReplyDeleteநல்ல யோசனை -- இதுதான் நல்ல யோசனை .....
சம்பந்தப்படவர்களிடமே யோசனை கேட்பது ..!
ஹி ஹி..நன்றி தோழி..
Deleteசுகமான அவஸ்தைதான்!
ReplyDeleteம்ம்..ஆமா பாஸ்..வருகைக்கு நன்றி
Delete[[அருணா செல்வம்
ReplyDeleteகன்னத்தில் ஒன்று கொடுத்துவிடு.
கண்கலங்க பார்க்கும் பொழுது
காதல் பெருக்கெடுக்கும்
கண்ணீருடன் கலந்து!]]
நான் கன்னத்தில் ஒன்று கொடுத்தேன்!
எதிர்பாரா முத்தம்.
அவளும் கொடுத்தாள் என் உதட்டில்
கண்ணில் கண்ணீருடன்!
வாயில் பெருக்கெடுத்த ரத்தமும்
என் கண்ணின் கண்ணீரும்
கலந்து வழிந்தது உடைந்த
இரண்டு முன் பல்லுடன்...!
ம்ம்...வருகைக்கு நன்றி நம்பள்கி....தோழி கொடுக்க சொன்னத கொடுக்காம நீங்க வேற கொடுத்தா பின்ன இப்படி தான்..ஐயோ பாவம் பல்லு போச்சே!!!!ஹா ஹா..
Delete