தனம் இருப்பவனெல்லாம்
தானம் செய்துவிட்டால்
தரணியில் இல்லாதவன் என்றோர்
இனம் இருக்கப் போவதில்லை..
கற்றவன் எல்லாம்
கல்வியை விற்காவிட்டால் இங்கு
கல்லாதவன் என்றோர் குலம்
இருக்கப் போவதில்லை..
அன்பு கொண்ட நெஞ்சங்கள் எல்லாம்
அனைவரையும் ஆதரித்துவிட்டால் இங்கு
அனாதை என்றோர் அவலம் இருக்கப் போவதில்லை..
புனிதராய் வாழ வேண்டாம்..
மனிதராயாவது வாழ்வோம்
மண்ணோடுப் போகும் வரை...
- ஆதிரா.
எல்லோரும் மனிதராக வாழ்ந்தாலே இம்மண்ணுலகம் சொர்க்கலோகமாகவே மாறிவிடுமே
ReplyDeleteஎ நேயம் போற்றினாலே மற்றதெல்லாம் சறியாகிவிடும்
ReplyDelete"புனிதராய் வாழ வேண்டாம்..
ReplyDeleteமனிதராயாவது வாழ்வோம்
மண்ணோடு போகும் வரை".. நல்ல சிந்தனை பாராட்டுக்கள் சகோதரியே
நன்றி சகோதரா...
Delete