நால்வகைப் பூக்களை நட்டு வைத்து வளர்க்கும்
நாட்டுப் பண்ணை இன்று நர்சரி பள்ளியானது...
பால் குடி மறவா எம் பச்சிளம் குழந்தைகள்
புத்தக பொதி சுமந்த பூக்களாயின ..
முன்னேரத்திலேயே முழுதாய் தூக்கம் கலையாமல்
மூன்று சக்கர வண்டியில் மூட்டைகளாய்
அடைக்கப்பட்டு ..
பின்னேரத்தில் எம் பிஞ்சு பூக்கள்
பிடி விடுபட்ட பட்டாம் பூச்சிகளாய்
வீடு வந்துச் சேரும் போதும்
வாடுவதே இல்லை..
ஆம்!!காகிதப் பூக்கள் எங்ஙனம் வாடும்???
குழந்தைகள் முதிர்ச்சி அடைந்து பெரியவர்கள் போல் ஆகி விட்டார்கள்... அவர்களின் களைப்பு கூட நமக்கு தெரியாதது போல் நடிக்க கற்றுக் கொண்டிருக்கிறார்கள்...
ReplyDeleteதங்கள் வரவிற்கு நன்றி!!அவர்களை காதிதப் பூக்களாய் ஆக்கியதே நாம் தான் என்பதே என் ஆதங்கம்..
Delete