மனதால் மாலையிட்டுப் பின்
மணவறையில் அமருங்கள்
இல்லையெனில்
மணவறையில் அமர்ந்த பின்னாவது
மனதால் மாலையிட்டுக் கொள்ளுங்கள்
வெறுமனமாய் ஒரு திருமணம் செய்து பின்
வெறுப்பு வந்ததென்று விலகிச்செல்ல
நீங்கள் ஒன்றும்
கட்டி வைத்து கட்டவிழ்த்து ஓடும்
மாடுகள் அல்ல இது ஒன்றும்
மாட்டுத் தொழுவமும் அல்ல...
அணு அணுவாய் செத்து மடிவீரோ இல்லை
அனுதினமும் சிரித்து மகிழ்வீரோ இரண்டையும்
இன்பமாய் ஏற்று இணைந்தே இருங்கள்..
- ஆதிரா
கவிதை படிக்க நன்றாக இருக்கிறது.
ReplyDeleteஎன் நன்றிகள்..
Delete