Monday, February 18, 2013

எப்படி வளர்கிறது என் காதல்???

மணிகணக்காய் பேசி உன்
மடியில் படுத்து உறங்கி
மார்புச்  சூட்டில் புதைந்து
மீசை முடியை இழுத்து
நான் காதல் வளர்க்கவில்லை...

ஓசி வண்டியில் அமர்ந்து
ஒருவருக்கும் தெரியாமல்
ஊரைச் சுற்றி வந்து உன்
கைகள் கோர்த்து கொண்டு
கால்கள் சேர நடந்து
நான் காதல் வளர்க்கவில்லை...

அரை கப் ஐஸ்க்ரீமை 
அரைமணி நேரம் ருசித்து
ஆள் இல்லா தியேட்டர் தேடி
பரிசுப் பொருட்கள் மாற்றி
பார்ப்பதையெல்லாம் கேட்டு உன்
பர்சை காலி செய்து
நான் காதல் வளர்க்கவில்லை...

கண்கவர் உடையில் உன்
கண்ணுக்கு தீனி போட்டு நீ
மென்னு மென்னுத்  தின்ன
மெல்ல மெல்லச்  செத்து
நான் காதல் வளர்க்கவில்லை...

சின்னப்  பொய்களுக்கும்
செல்லத்  தவறுகளுக்கும்  உன்
கண்ணம் கிள்ளி காதைத் திருகி
ஊடல் போய் கூடல் வந்து உன்
உதடு பிரியாப்  புன்னகையிலும்
ஓரக்கண் பார்வையிலும்
உயிரைத்  தொலைத்து
நான் காதல் வளர்க்கவில்லை...

பிறகு எப்படித்  தான் வளர்கிறது என் காதல்???

காணாத போதும்
கலையாத கனவிது.
அணைக்காத போதும்
அனையாத நெருப்பிது.
உரையாடத போதும்
உறங்காத விழியிது.
எனக்குள் இருப்பவன்
எங்கோ இருக்கிறான்
எனக்காய் இருக்கிறான்
என்னில் அவனும் 
அவனில் நானும் 
வாழும் வரையில்
வளரும் என் காதல்...



11 comments:

  1. எனக்காய் இருக்கிறான்
    என்னில் அவனும்
    அவனில் நானும்
    வாழும் வரையில்
    வளரும் என் காதல்...அதுவே உண்மைக்காதல்...

    ReplyDelete
  2. ஆழ்மனதில் வளருதோ அதிசய காதலோ வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி தோழரே...

      Delete
  3. நல்ல கவிதை, காதல் ரசம் கொட்டுகிறது.

    ReplyDelete
  4. ஆத்மார்த்தமான காதல் வளரட்டும். மிகவும் ரசித்தேன் வரிகளை.

    ReplyDelete
  5. அருமை ஆதிரா... சிறப்பான கவிதை நடை.. சொல்லப் பட்ட விதத்தை ரசித்தேன்.. இது ஒரு எளிமையான காதலைச் சொல்லினாலும், காதல் என்ற பெயரில் தேவையற்றவைகளைச் செய்யும் சிலரை சாடும் விதமாக அமைந்தது சிறப்பு... எனக்கு ஒரு சிறிய நெடுடல். அது என்ன வென்றால் அழகாக வார்த்தைகள் கோர்க்கப்பட்டு வரும் கவிதையில் //பர்சை காலி, தியேட்டர்// வார்த்தைகள் சற்று சரியாக அமையாமல் தடையை ஏற்படுத்துவதாக எனக்குப் பட்டது... இந்த வார்த்தைகளுக்கு பதிலாக அதற்கு இணையான வார்த்தைகள் பயன்படுத்தி இருந்திருக்கலாமோ என்று எண்ணினேன்..

    ReplyDelete
  6. அடடா !!!!!!!!!!என் பக்கத்தில் இருக்கும் கிறுக்கல்களைப் படிக்கக் கூட அகலுக்கு இன்று நேரம் கிடைத்திருக்கிறது....வருகைக்கு நன்றி..

    சத்தியமான உண்மை அகல்..அந்த நெருடல் எனக்கும் உண்டு..அதற்குக் காரணம் என்னிடம் போதுமான அளவு தமிழறிவு இல்லாததே...ஒரு வார்த்தைக்கு அதற்கு இணையான அர்த்தம் கொண்ட வார்த்தைகளை தேடுவதில் தடுமாறிக் கொண்டு தான் இருக்கிறேன்.
    தத்தி தத்திக் கற்றுக் கொள்வேன் என்று நம்புகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. :) உங்களது தேடல் தொடரட்டும் வாழ்த்துக்கள் ஆதிரா..

      Delete